கோட்டுப்போட்ட கிறுக்கனொருத்தன்
கத்தியோட அலையிறானாம்,
வீட்டைவிட்டுப் பிள்ளைகளை
வெளிய அனுப்பாதே...
போனஸ் பணம்கேட்டு
போராட்டத்துக்குக் கிளம்பியவன்,
ஜாடையாய்க் கூப்பிட்டு,
ஜாடையாய்க் கூப்பிட்டு,
சத்தமாய்ச்சொன்னான் மனைவியிடம்...
கேட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள்
கிலியோடு முகம்பார்க்க,
கதவைப்
பூட்டியவள் மெல்லமாய்
மனசுக்குள் முணுமுணுத்தாள்...
வீட்டுச் சுவற்றுக்குள்
அடைஞ்சு கிடந்தாலும்,
வேட்டும் விமரிசையும்
வேட்டும் விமரிசையும்
காதில்
விழாமலா இருக்குமென்று...






